சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணி தொடக்கம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புனரமைப்பு பணி தொடக்கம்
28-10-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தை மாதத்தில் கலசாபிஷேகம் நடக்கிறது. இதற்காக ரூ.30 லட்சம் செலவில் மூன்று நிலை கொண்ட அலங்கார வளைவு (சாலகரம்) அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மதில் சுவர் கட்டும் பணியும் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக கோவிலின் மேற்குப்பகுதி மதில் சுவர் ரூ.4 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும், கொடிமரம் மற்றும் கோவிலின் மூலஸ்தான மேற்கூரை புனரமைப்பு, கோவில் தூண்களில் கிரானைட் பதிப்பது உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், மண்டைக்காடு சாஸ்தா கோவிலிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாகவும், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
0 Comments: