
Manavai News
மணவாளக்குறிச்சி ஆட்டோ, கார், டெம்போ ஓட்டுனர்கள் நடத்திய சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா
மணவாளக்குறிச்சி ஆட்டோ, கார், டெம்போ ஓட்டுனர்கள் நடத்திய சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா
03-10-2014
மணவாளக்குறிச்சி ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பொதுமக்கள் இணைந்து நடத்திய சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா 1-ம் தேதி மற்றும் 2-ம் தேதி நடைபெற்றது. 1-ம் தேதி நடைபெற்ற விழாவில் காலை 10 மணிக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கலைமகள் பூஜை நடந்தது.
2-ம் தேதி நடந்த விழாவில் மதியம் 1 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடந்தது. இதில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு உணவரிந்தினர். இரவு 8 மணிக்கு சாய் பாபு குழுவினரின் திரைப்பட மெல்லிசை விருந்து நடைபெற்றது.
தொடர்ந்து மணவாளக்குறிச்சி பாலம் அருகில் டெம்போ ஓட்டுனர், உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்தும் சரஸ்வதி, ஆயுதபூஜை விழா இன்று (03-ம் தேதி) நடந்து வருகிறது. காலை 10 மணிக்கு விளையாட்டு போட்டியும், 11 மணிக்கு கபடி மற்றும் வடம் இழுத்தல் போட்டியும், மதியம் 2 மணிக்கு உறியடி போட்டியும் நடந்தது.
மாலை 6 மணிக்கு பரிசு வழங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மணவாளக்குறிச்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் மற்றும் தொமுச கௌரவ தலைவர் குட்டிராஜன் கலந்து கொண்டார். இரவு 7.30 மணிக்கு பாப் பாடகி ஐடியா ஸ்டார் சிங்கர் ரியானா கலந்து கொள்ளும், சிவகுமார் வழங்கும் ஸரிக இசைக்குழுவின் மாபெரும் இன்னிசை விருந்து நடைபெற்று வருகிறது.
0 Comments: