குமரிமாவட்ட செய்திகள்
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு: அ.தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சியில் சாவு
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு: அ.தி.மு.க. பிரமுகர் அதிர்ச்சியில் சாவு
09-10-2014
கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 52). இவர் கருங்கல் பேரூர் 6–வது வார்டு அ.தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்தார். தங்க நகை செய்யும் தொழில் செய்தார். இவர் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டார். இவரது ஏழ்மையை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. கட்சி மேலிடம் நிதி உதவி செய்தது.
அ.தி.மு.க. தீவிர தொண்டரான இவர், கட்சி சார்பில் நடக்கும் எல்லா போராட்டங்களிலும் பங்கேற்க தவறமாட்டார். சமீபத்தில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து கருங்கலில் நடைபெற்ற உண்ணாவிரதபோராட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயலலிதாவை, பெங்களூர் ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்யும் என்று அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். இதற்காக ஆவலோடு டெலிவிஷன் முன் அமர்ந்து செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது என்று செய்தி அறிவிக்கப்பட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
இவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த மணிக்கு சாந்தி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும், பிரியங்கா என்ற மகளும் உள்ளனர்.
0 Comments: