
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே அரசு பள்ளியில் திருட்டு
மணவாளக்குறிச்சி அருகே அரசு பள்ளியில் திருட்டு
09-10-2014

அந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பொதுமக்கள் பார்த்து, பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர், அங்கு சென்று பார்த்தபோது, அறையின் பூட்டை யாரோ உடைத்து உள்ளே புகுந்து, அங்கு வைத்திருந்த 2 மானிட்டர்கள், டெலிவிஷன் பெட்டி மற்றும் ரூ.500 ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெகன் மோகன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து திருடனை தேடி வருகிறார்.
0 Comments: