
சுற்றுவட்டார செய்திகள்
முட்டம் கடலில் வள்ளம் கவிழ்ந்து 4 மீனவர்கள் படுகாயம்
முட்டம் கடலில் வள்ளம் கவிழ்ந்து 4 மீனவர்கள் படுகாயம்
13-08-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள
மேலமுட்டத்தை சேர்ந்தவர் ரிச்சர்டு. இவரது வள்ளத்தில் நேற்று முன்தினம் அருள்தாசன், சேசையா, சூசை ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். திடீரென இவர்களின் வள்ளம் கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது.
இதில், வள்ளத்தில் இருந்த 4 பேரும் கடலுக்குள் விழுந்தனர். மீன்பிடி வலைகள், என்ஜின் ஆகியவையும் கடலில் மூழ்கியது. உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவர்களை அந்த வழியாக வந்த மீனவர் பங்கிராஸ் பார்த்து கரைக்கு மீட்டு வந்தார். பின்னர் அவர்கள் குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
வள்ளம் கவிழ்ந்தது பற்றி ரிச்சர்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
0 Comments: