
Manavai News
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா 15-ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா 15-ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது
13-08-2014
மணவாளக்குறிச்சி, படர்நிலம் புனித பத்தாம் பத்திநாதர் ஆலய திருவிழா 15-ம் தேதி துவங்கி இம்மாதம் 24-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் விழாவில் காலை 6.15 மயிலோடு பங்குதந்தை சேவியர் பெனடிக்ட் தலைமையில் திருக்கொடி ஏற்றப்படுகிறது. 2-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு சின்னவிளை பங்குதந்தை பெஞ்சமின் போஸ்கோ தலைமையில் செபமாலையும், 3-ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு மறைக்கல்வி மன்ற விளையாட்டு போட்டியும், மாலை 6.30 மணிக்கு மாங்குழி பங்குதந்தை ரோமறிங் ததேயுஸ் தலைமையில் செபமாலையும், 4-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு இனையம் இணைபங்குதந்தை தலைமையில் செபமாலையும், 5-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு தட்டான்விளை பங்குதந்தை ஸ்டனிஸ்லாஸ் தலைமையில் ஜெபமாலையும் நெடைபெருகிறது.
6-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு களிமார் பங்குதந்தை மரிய கிளாட்ஸ்டன் தலைமையில் ஜெபமாலையும், 7-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு ஆரோக்கியபுரம் பங்குதந்தை பிறிமா சிங் தலைமையில் ஜெபமாலையும், இரவு சமபந்தி விருந்தும், 8-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு பெரியவிளை பங்குதந்தை ஜோசப் தலைமையில் ஜெபமாலையும், 9-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு முளகுமூடு மறைவட்ட அருட்தந்தை சகாயதாஸ் தலைமையில் ஜெபமாலையும், 10-ம் நாள் விழாவில் மாலை 5.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா, இரவு 9 மணிக்கு காப்புக்காடு சிற்பி தியேட்டர்ஸ் வழங்கும் “புனித அருளானந்தர்” எனும் நாடகம் நடைபெறும், விழா நிகழ்ச்சிகளை பங்குதந்தை மற்றும் பங்குபேரவை மக்கள் செய்து வருகின்றனர்.
0 Comments: