
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி, கூட்டுமங்கலம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மணவாளக்குறிச்சி, கூட்டுமங்கலம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
11-08-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) ஜெயந்தி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் மாதவன் பிள்ளை கண்காட்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பொற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். ஆசிரியர் ஜாஸ்மின் கண்காட்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.
0 Comments: