
Manavai News
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்தது
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்தது
11-08-2014
மார்த்தாண்டம் முதல் கன்னியாகுமரி வரை மீனவ கிராமங்களை இணைத்து கடந்த சில ஆணடுகளுக்கு முன்பு குழித்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக மார்த்தாண்டம் அருகே காப்புக்காடு பகுதியில் இருந்து புதுக்கடை, கருங்கல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழியாக ரோட்டோரத்தில் குழித்தோண்டி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அந்த குழாய் ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் ஏர்வால்வு செயல்படாத காரணத்தால், குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு பாய்ந்தது. ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அங்கு வந்து குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
0 Comments: