
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிசந்தையில் இலவச ஆடு வழங்கும் விழா
வெள்ளிசந்தையில் இலவச ஆடு வழங்கும் விழா
11-08-2014
தமிழக அரசின் இலவச ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் வெள்ளிசந்தை பஞ்சாயத்துகுட்பட்ட பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. வெள்ளிசந்தை அரசு கால்நடை மருத்துவமனையில் வைத்து நடந்த இந்நிகழ்ச்சியில் 195 பயனாளிகளுக்கு தலா நாண்டு ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வெள்ளிசந்தை பஞ்சாயத்து தலைவர் சுதா திருமலை ஆடுகளை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். தக்கலை கோட்ட கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் விக்டர் ஜாண் போஸ்கோ, வெள்ளிசந்தை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ராஜமோகன், மணவாளக்குறிச்சி கால்நடை மருத்துவர் டாக்டர் பரமேஸ்வரன், கால்நடை ஆய்வாளர் ராஜலெட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: