
Manavai News
மணவாளக்குறிச்சியில் இலவச கண் சிகிட்சை முகாம்
மணவாளக்குறிச்சியில் இலவச கண் சிகிட்சை முகாம்
11-08-2014
மணவாளக்குறிச்சி மணல் ஆலை மற்றும் நாகர்கோவில் வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு மணல் ஆலை தலைவர் மகாபத்ரா தலைமை தாங்கினார். தொழிலதிபர் கல்யாண சுந்தரம் முகாமை தொடங்கிவைத்தார்.
இதில் ஆலை பொதுமேலாளர் ஜனா, துணை பொதுமேலாளர் செல்வராஜ், முதுநிலை மேலாளர்கள் மூர்த்தி, சீனிவாசன், வள ஆதாரமேலாளர் சிவராஜ், சுரங்க மேலாளர் பரத், டாக்டர்கள் ராஜா, சோனிமா, அஞ்சனா உள்பட பலர் பங்கேற்றனர். முகாமில் கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை மற்றும் கண் கண்ணாடி வழங்கப்பட்டன.
0 Comments: