
Manavai News
மணவாளக்குறிச்சி பகுதியில் மீனவர் மீது தாக்குதல்
மணவாளக்குறிச்சி பகுதியில் மீனவர் மீது தாக்குதல்
07-08-2014
மணவாளக்குறிச்சி, ஆறான்விளை சுனாமி காலனியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 36). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாபுஜிதெருவை சேர்ந்த காமராஜ் என்பவர் அங்கு வந்து, புஷ்பராஜை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு புஷ்பராஜ் ஏன் இவ்வாறு தகாத வார்த்தைகளால் பேசுகிறீர்கள் என்று கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த காமராஜ் மற்றும் அவருடன் வந்த 4 பேரும் சேர்ந்து, புஷ்பராஜை சராமாரியாக தாக்கி, அவர் தலையில் பாட்டிலால் அடித்ததாகவும் தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புஷ்பராஜ் புகார் செய்தார். அதன்பேரில் காமராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
0 Comments: