
குமரிமாவட்ட செய்திகள்
கருங்கல், மாத்திரவிளை தூய ஆரோபண அன்னை ஆலய பாதுகாவல் பெருவிழா துவங்கியது
கருங்கல், மாத்திரவிளை தூய ஆரோபண அன்னை ஆலய பாதுகாவல் பெருவிழா துவங்கியது
06-08-2014
கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை தூய ஆரோபண ஆலய பாதுகாவல் பெருவிழா இன்று (6-ம் தேதி) துவங்கியது. முதல் நாள் விழாவான இன்று காலை 6.45 மணிக்கு திருப்பலியும், திருக்கொடியேற்று நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 8.30 மணிக்கு குமரி தாசின் “நெஞ்சில் நிறைந்த தெய்வம்” சமூக சீர்திருந்த நாடகம் நடக்கிறது.
2-ம் நாள் விழாவில் இரவு 8.30 மணிக்கு திக்கணங்கோடு அருளானந்தபுரம் இறைமக்கள் சார்பில் “கலைக்கதம்பம்” நிகழ்ச்சியும், 3-ம் நாள் இரவு 8.30 மணிக்கு தூய ஜோசப் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியரின் “கலைப்பூங்கா” நிகழ்ச்சியும், 4-ம் நாள் இரவு 8.30 மணிக்கு அன்பியங்களின் ஆண்டு விழா, ககலை நிகழ்ச்சிகளும், 5-ம் நாள் இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்ட கலை நிகழ்ச்சிகளும், 6-ம் நாள் இரவு மாத்திரவிளை விடியல் கலைக்குழுவினரின் “விடியல் தரும் விண்மீன்” நாட்டிய நாடக நிகழ்ச்சியும், 7-ம் நாள் இரவு 8.30 மணிக்கு குமரி தமிழன் கலைக்கூடம் வழங்கும் “குடும்பத்தில் ஆண்களுக்கு பெண்கள் தலைவியா” தலைவலியா?” என்ற நகைச்சுவை பட்டிமன்றமும் நடக்கிறது.
8-ம் நாள் இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரம் வினோத் வழங்கும் “ஜக்ளிங் கலந்த கலைச்சாரல்” நிகழ்வும், 9-ம் நாள் இரவு 8.30 மணிக்கு தேர்பவனியும், முடிவில் “வாணவேடிக்கை” நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா முடிவு நாளான 10-ம் நாள் காலை 9 மணிக்கு கோட்டார் மறை ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, இந்திய சுதந்திரதின விழா, ஆடம்பர கூட்டுதிருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சிகளை மாத்திரவிளை பங்கு தந்தை டோமினிக் சாவியோ, இணை பங்கு தந்தை டைட்டஸ் மோகன் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
0 Comments: