
குமரிமாவட்ட செய்திகள்
குளச்சல் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை: கலெக்டர்-கேரள அதிகாரிகள் பங்கேற்பு
குளச்சல் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை: கலெக்டர்-கேரள அதிகாரிகள் பங்கேற்பு
04-08-2014
இந்தியாவில் மன்னர் ஆட்சி நடந்தபோது, 1741–ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது டச்சுப்படையினர் போருக்கு வந்தனர். அப்போது மன்னர் மார்த்தாண்டவர்மாவின் படைகள் குளச்சல் பகுதியில் டச்சுப்படையினை எதிர்த்து போரிட்டது.
இதில், டச்சுப்படையினர் போரில் தோல்வி கண்டு பின் வாங்கினர். இதன் நினைவாக குளச்சல் துறைமுக பகுதியில் மன்னர் மார்த்தாண்டவர்மா ஒரு வெற்றி தூணை நிறுவினார். 1741–ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வெற்றி தூணுக்கு ஆண்டுதோறும் ஜூலை 31– ம் தேதி வீரர்கள் மரியாதை செலுத்தி வந்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி, குளச்சல் வெற்றி தூணுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக திருவனந்தபுரம் பாங்கோட்டில் இருந்து 7–வது பட்டாலியன் வீரர்களும், கமாண்டர் கர்னல் டுசண்ட் ஜோலி, சென்னை 9–வது பட்டாலியன் கர்னல் சஞ்சய்ஜி, முன்னாள் ராணுவ மேஜர் ஜெயக்குமார், முன்னாள் மேஜர் ஜெனரல் தேவவரம், திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ பிரிகேடியர் சமீர் சலுங்கே, மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், குளச்சல் ஏ.டி.எஸ்.பி. கங்காதர், ஏ.டி.எஸ்.பி. வீரராகவன், குளச்சல் நகராட்சி ஆணையாளர் சுரேஷ், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: