
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை
03-08-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அடி மாத நிறைபுத்தரிசி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு நெற்கதிர் சார்த்தப்பட்டது. பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு நெற்கதிர் வழங்கப்பட்டது.
மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும், மாலையில் சாயரட்சை பூஜையும், இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
0 Comments: