
Events
Manavai News
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற மாபெரும் மார்க்க பேருரை நிகழ்ச்சி – இமாம் சவுகத் அலி உஸ்மானி பங்கேற்பு
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற மாபெரும் மார்க்க பேருரை நிகழ்ச்சி – இமாம் சவுகத் அலி உஸ்மானி பங்கேற்பு
01-08-2014
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக ஈகைப்பெருநாள் இனிய தின பெருவிழா மற்றும் இஸ்லாமிய பேரவையின் 29-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜூலை 30 மற்றும் 31-ம் தேதிகளில் இஸ்லாமிய மார்க்க பேருரை பீச்ரோடு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் கலாச்சாரக்கழக தலைமை இமாம் மௌலவி சவுகத் அலி உஸ்மானி கலந்து கொண்டு பேருரை வழங்கினார்.
நேற்று இரவு 9 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் இளைஞர் பேரவை முன்னாள் செயலாளர் முஹம்மது முபீன் தலைமை தாங்கினார். ஃபர்ஹான் வரவேற்று பேசினார். துவக்கவுரை தலைமை இமாம் மௌலவி ஜலீல் உஸ்மானி வழங்கினார். முஹல்ல தலைவர் ஹல்பா பஷீர் வாழ்த்துரையும், முடிவில் பேரவை தலைவர் அசாருதீன் நன்றியுரையும் வழங்கினார்.
![]() |
முஹல்ல தலைவர் ஹல்பா பஷீர் பேசிய காட்சி |
![]() |
கலாச்சாரக்கழக தலைமை இமாம் மௌலவி சவுகத் அலி உஸ்மானி பேசிய காட்சி |
நிகழ்ச்சியில் முடிவில் கிராஅத் போட்டி, பாட்டு போட்டி, விளையாட்டு போட்டிகள், வடம் இழுத்தல் போட்டி, வாலிபால் போட்டி, கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை முஹல்ல செயற்குழு உறுப்பினர் முஹம்மது முபீன் தொகுத்து வழங்கினார்.
0 Comments: