
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளமடி பூமி பாதுகாப்பு சங்க கூட்டம்
வெள்ளமடி பூமி பாதுகாப்பு சங்க கூட்டம்
31-07-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளமடி பூமி பாதுகாப்பு சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சிதம்பரநாதன் முன்னிலை வகித்தார். பொதுசெயலாளர் பத்மதாஸ் ஆண்டு அறிக்கை வாசித்தார். தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அம்மாண்டிவிளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வரதராஜன், மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைசெயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார். பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
0 Comments: