
Events
மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை
மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை
29-07-2014
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இதன்படி உலமெங்கும் வாழும் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்து வந்தனர். நேற்று “ஷவ்வால் பிறை” தென்பட்டதை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் ரமலான் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து மணவாளக்குறிச்சி முஸ்லிம் பள்ளிவாசலில் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு பெண்களுக்கான தொழுகையும், காலை 9 மணிக்கு ஆண்களுக்கான தொழுகையும் நடந்தது. தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
0 Comments: