
District News
Ladies Special
ஏழை மாணவி வீட்டுக்கு மின் இணைப்பு முதன்மைக் கல்வி அதிகாரி செய்து கொடுத்தார்
ஏழை மாணவி வீட்டுக்கு மின் இணைப்பு
முதன்மைக் கல்வி அதிகாரி செய்து கொடுத்தார்
04-03-2013
குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதா கிருஷ்ணன் மாணவ- மாணவிகளை அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்து கல்வி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் தோவாளை அருகே உள்ள தேவசகாயம் மவுண்ட் பகுதியில் செங்கல் சூளை தொழிலாளியின் மகள் நிஷா நந்தினி வீட்டுக்கு சென்றார்.
இம்மாணவி, தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டில் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. முதன்மைக் கல்வி அதிகாரி சென்றபோது, மாணவி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு உதவி செய்ய நினைத்த முதன்மைக் கல்வி அதிகாரி உடனே மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். இதன்படி மின் இணைப்பு தரப்பட்டது. இதை முதன்மைக் கல்வி அதிகாரி நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார்.
அப்போது மாணவியிடம் அவர் கூறு கையில், 'ஆபிரகாம்லிங்கன் அடுப்பு எரியும் வெளிச்சத்தில் படித்துத்தான் அமெரிக்க அதிபரானார். ஜி.டி. நாயுடு ஓட்டலில் வேலை பார்த்து அறிவியல் மேதையானார். தாமஸ் ஆல்வா எடிசன் பத்திரிகைகளை விற்று அறிவியல் கண்டுபிடிப்பாளராக உயர்ந்தார். சாதிப்பதற்காக வாழ்ந்ததால் அவர்களை வரலாறு வரவேற்றது. துன்பம், துயரம் எந்த வடிவத்தில் வந்தாலும் குறிக்கோளை மனஉறுதியுடன் நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
இதை உன்னிப்பாக கேட்ட நிஷா நந்தினி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400-க்கு மேல் மதிப்பெண் எடுப்பேன் என உறுதியுடன் கூறினார். இவருடைய தங்கை நிஷா ஷாலினி, தம்பி பரத்பிரவின் ஆகியோரும் அதிக மதிப்பெண் எடுப்போம் என கூறினர்.
0 Comments: