
Events
Surrounded Area
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 2–ம் நாள் காட்சிகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
திருவிழா 2–ம் நாள் காட்சிகள்
05-03-2013
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா 2–ம் நாள் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-
![]() |
முதல் நாள் திருவிழா அன்று திருவிளக்கு பூஜை நடந்தகாட்சி |
காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது., 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6 தீபாராதனையும் நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5 மணிக்கு 6 சிறப்பு நாதஸ்வரம் மற்றும் சாயரட்சை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 9 மணிக்கு அத்தாழபூஜையும் கோவிலில் நடந்தது.
![]() |
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் |
![]() |
விளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன |
![]() |
அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றகாட்சி |
மாநாடு நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு தேவி மகாத்மிய பாராயணம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு பார்வதிபுரம் குருஜி பேபி அம்மா சாரதா ஆஸ்ரமம் லெக்ஷ்மி குழுவினரின் அகவல் பாராயணம் நிகழ்ச்சியும், 10 மணிக்கு ஆன்மிக மகாபாரதம் தொடர் விளக்க உரை நிகழ்வும் நடந்தது.
![]() |
வில்லிசை கச்சேரி நடந்த காட்சி |
![]() |
சமய மாநாடு நடந்த காட்சி |
![]() |
பக்தி இன்னிசை கச்சேரி நடந்த காட்சி |
பிற்பகல் 12.30 சமய மாநாடு நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு தெக்குறிச்சி ஆதி சக்தி வில்லிசை குழுவினரின் வில்லிசை கச்சேரியும், இரவு 10 மணிக்கு லெட்சுமிபுரம் பிரியதர்ஷினி நாட்டிய பள்ளி மாணவிகளின் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.
வில்லிசை வீடியோ காட்சி
பரத நாட்டிய வீடியோ காட்சி
0 Comments: