
Other News
Special News
இந்திய மன்னர்கள், முஹலாயர்கள், பிரிட்டீசார் கால நாணயங்கள் சேகரிக்கும் முதியவர்
இந்திய மன்னர்கள், முஹலாயர்கள், பிரிட்டீசார் கால நாணயங்கள் சேகரிக்கும் முதியவர்
23-02-2013
நம்மில் சிலருக்கு சில பொருட்களை சேகரிப்ப, தபால் தலைகள் சேகரிப்பது, பழைய நாணயங்கள் சேகரிப்பது, அயல்நாட்டு நாணயங்கள் சேகரிப்பது முதலியவற்றில் ஆர்வம் இருக்கும். ஆனால் சுமார் 70 வயது முதியவர் ஒருவர் இந்தியாவில் புழக்கத்தில் இருந்து வந்த பல மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், முகலாயர்கள் பயன்படுத்திய நாணயங்கள் மற்றும் பிரிட்டிசார் வெளியிட்ட நாணயங்கள் உள்பட பல நாணயங்கள் சேகரித்து ஆச்சர்யப்படுத்துகிறார்.
![]() |
பழைய நாணயங்களுடன் ஆஷிக் ரஹ்மான் |
மதுரை மாநகர மையப்பகுதியில் அமைந்துள்ள ஹாஜியார்தெருவை சேர்ந்தவர் ஆஷிக் ரஹ்மான். இவருக்கும் தற்போது சுமார் 70 வயது ஆகிறது. இவர் சிறுவயதில் பல்வேறு வியாபாரங்கள் செய்து வந்துள்ளார். அப்போது இவருக்கு இந்திய பழைய நாணயங்கள் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதன் அடிப்படையில் பல பழைய நாணயங்களை சேகரிக்க துவங்கியுள்ளார்.
![]() |
பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் தாள்கள் |
தொடர்ந்து அதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடவே சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், இந்தியாவில் ஆட்சி புரிந்த முகலாய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் மற்றும் பிரிட்டிசார் காலனி ஆதிக்கத்தின் போது வெளியிடப்பட்ட நாணயங்கள் என அனைத்து வைகயான நாணயங்களும் இவர் சேகரித்தார். இதனுடன் வெளிநாட்டு நாணயங்களும் சேகரித்தார்.
![]() |
பழைய மாடல் ரூபாய் நோட்டுகள் |
மேலும், சில வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட 1 பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா மற்றும் 1 ரூபாய், 2 ரூபாய் பழைய 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 100 ரூபாய் ஆகியவைகளும் ஒரு அணா, இரண்டு அணா, ஓட்டை கால் அணா, அரை அணா உள்பட பல்வேறு நாணயங்கள் வைத்துள்ளார்.
![]() |
ஓட்டை அணாக்கள், முகாலய நாணயங்கள், சோழர்கால நாணயங்கள் மற்றும் பிரிட்டீஷ் கால நாணயங்கள் |
மேலும் இதுபோன்று நாணயங்கள் சேகரிப்பவர்களுக்கு தன்னிடம் உள்ள நாணயங்களை சிறு விலைக்கு விற்பனையும் செய்கிறார். இதுபோன்று பழைய நாணயங்கள் சேகரிப்பவர்களுக்கு நாணயங்கள் தேவை எனில் இவரை 99943 25716, 88073 73732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
![]() |
பழைய ரூபாய் நோட்டுகள் |
0 Comments: