
குமரிமாவட்ட செய்திகள்
வக்கீல் சங்க விரிவாக்க கட்டிடம் ஜேப்பியார் திறந்து வைத்தார்
வக்கீல் சங்க விரிவாக்க கட்டிடம் ஜேப்பியார் திறந்து வைத்தார்
23-02-2013
நாகர்கோவிலில் வக்கீல் சங்க விரிவாக்க கட்டிடத்தை ஜேப்பியார் திறந்து வைத்தார்.
நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் நாகர்கோவில் வக்கீல் சங்க கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு முதல் தளம் கட்டப்பட்டு உள்ளது. இதை சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் கட்டி தந்துள்ளார். அதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு வக்கீல் சங்க தலைவர் பி.செல்வராஜ் தலைமை தாங்க, சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் முதல் தளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். குத்து விளக்கை இணை செயலாளர்கள் ஜெயராணி, செல்வகுமரன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். இதைத்தொடர்ந்து வக்கீல் சங்க உறுப்பினர்கள் கையேடை ஜேப்பியார் வெளியிட்டு பேசினார். இதில் மூத்த வக்கீல்கள் அகமது கான், எம்.ஏ.ஜேம்ஸ், ரெத்தினசாமி, ஜெயசந்திரன், பரமதாஸ் மற்றும் ராஜையா, ஹரிகரன், சுசீலா ஆகியோர் கலந்து கொண்டு முதல் தளத்தை கட்டி கொடுத்த ஜேப்பியாரை பாராட்டி பேசினார்கள்.
தொடக்கத்தில் சங்க செயலாளர் சி.காட்வின் ஏசுதாஸ் வரவேற்று பேசினார். முடிவில் பொருளாளர் எஸ்.கிரைஸ்ட் மில்லர் நன்றி கூறினார். சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசை துணைத்தலைவர் ஜான்சன் வழங்கினார். இதில் நூலகர் சிவராஜபூபதி, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு வக்கீல் பால ஜனாதிபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜேப்பியார் பேசும் போது கூறியதாவது :–முட்டம் கிராமத்தில் பிறந்து படித்தேன். பள்ளி அருகிலேயே வீடு இருந்தது. எங்கள் வீட்டில் இருந்து புகை வந்தால் அன்று மதியம் சாப்பாடு உண்டு. புகை வராவிட்டால் சாப்பாடு கிடையாது என்று பட்டினி கிடந்துள்ளேன். இன்று சாப்பாடு கிடைக்கிறது. ஆனால் சாப்பிட முடியவில்லை. முன்பு பஸ் ஏற முடிந்தது காசு இல்லை, ஆனால் இன்று 800 பஸ் எனக்கு ஓடுகிறது. ஆனால் ஏற முடியவில்லை.
எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்து விட்டு சென்னை சென்று துறைமுகத்தில் ஒரு ரூபாய் கூலிக்கு கல் தூக்கி போட்டேன். இன்று துறைமுகம் கட்டுகிறேன். 10 என்ஜினீயரிங் கல்லூரிகள், ஒரு பல் மருத்துவக்கல்லூரி, பல்கலைக்கழகம், பாலிடெக்னிக் மற்றும் பள்ளிகள் உள்ளன. இதற்கு விடா முயற்சி தான் காரணம்.
என்னை மிசா சட்டத்தின்கீழ் கைது செய்தனர். 15 மாதங்கள் சிறையில் இருந்தேன். இதனால் வக்கீலாக வரவேண்டும் என்று வெளியே வந்து படித்தேன். அதைத்தொடர்ந்து பி.ஏ., எம்.ஏ. படித்து சட்டம் படித்து முடித்தேன். நான் நீதிபதியாக வரவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் இடையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கல்வி பணிக்கு சென்று விட்டேன். இதனால் நீதிபதியாகும் ஆசை நிறைவேறாமல் போய் விட்டது.
இந்த கட்டிடத்தில் குளிர்சாதன வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை செய்து தருகிறேன். மேலும் இங்குள்ள 100 வக்கீல்களுக்கு இன்சூரன்சும் தொடங்கி வைக்கிறேன். இவ்வாறு ஜேப்பியார் கூறினார். முன்னாள் எம்.பி. நாஞ்சில் எம்.வின்சென்ட் பேசும் போது, ‘வக்கீல் சங்க நூலகத்துக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள சுப்ரீம் கோர்ட்டு வழக்கு புத்தகங்கள் வாங்கி தருகிறேன்‘ என்று குறிப்பிட்டார்.
Thanks to 'Dailythanthi'
he is a criminal, when he gone for condition bail appear in Nagercoil court, the advocates are begged, What a logic for advocates. See how the advocates are respecting law. getting from criminal is same like suicide.
ReplyDeleteRead the speech...........
Before he was a beggar, Now all got by cheating, but he is speaking about hard work?
First should investigate by income tax.