
Announcements
மணவாளக்குறிச்சியில் பிரபல காய்கறி வியாபாரி மரணம்
மணவாளக்குறிச்சியில்
பிரபல காய்கறி வியாபாரி மரணம்
01-02-2013
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் பல வருடங்களாக காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் சுந்தரி (வயது 88). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆனநிலையில் தனியே வசிக்கின்றனர். சுந்தரி மட்டும் தனியாக காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
![]() |
காய்கறி கடை அதிபர் சுந்தரி இறந்த தகவலை அறிந்து கடையின் முன்னால் கூடிய பொதுமக்களை காணலாம் |
இவர் கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் வியாபாரத்தை தினமும் செய்து வந்தார். உடல்நலம் குன்றியதால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்துள்ளார். வழக்கம்போல் இன்றும் வியாபாரம் செய்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் மிக மோசமானதால் காலை 10.30 மணி அளவில் கடையின் அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். மாலை சுமார் 6.30 மணி வரை தூக்கத்தை விட்டு எழவில்லை. எனவே சந்தேகமடைந்தவர்கள் சுந்தரி தூங்கிக்கொண்டிருந்த கட்டிலின் அருகில் சென்று பார்த்தபோது பேச்சு மூச்சற்று கிடந்தது தெரியவந்தது.
![]() |
சுந்தரியின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி சென்ற காட்சி. அருகில் பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா |
உடனே மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜோஸ்பின் ரீட்டா, கவுன்சிலர் ஐயப்பன் உள்பட பலர் வந்தனர். அப்போது காய்கறி கடை அதிபர் சுந்தரி இறந்தது தெரிந்தது. அவர் இறந்து சில மணி நேரம் ஆகிவிட்டது எனவும் தெரிந்தது. உடனே இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
![]() |
சுந்தரியின் கடை மற்றும் கடையில் அவர் அமரும் செயர் |
சிறிது நேரத்தில் உறவினர்கள் வந்து இறந்த சுந்தரியின் உடலை ஆம்புலன்சில் வைத்து, தலக்குளம் அருகில் உள்ள உடையார்பள்ளம் பகுதிக்கு கொண்டுசென்றனர். அங்கு நாளை காலை 9 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது.
மணவாளக்குறிச்சி பகுதியில் பல வருடங்களாக காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வந்த சுந்தரியை, மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்களுக்கு தெரியும். அவர் இறந்த தகவலை அறிந்ததும் ஏராளமான மக்கள் அவருடைய கடையில் கூடிவிட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
0 Comments: