
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சியில் தி.மு.க. சார்பில் மின்வெட்டை கண்டித்து தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்
மணவாளக்குறிச்சியில்
தி.மு.க. சார்பில் மின்வெட்டை கண்டித்து தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்
01-02-2013
மணவாளக்குறிச்சியில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மின்வெட்டை கண்டித்து மாலை நேர தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று மாலை 4 மணி அளவில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மணவாளக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் வி.குட்டிராஜன் தலைமை தாங்கினார். பேரூர் அவைத்தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், ஒன்றிய பிரதிநிதி கொஞ்சூஸ், முன்னாள் வட்ட செயலாளர் துரைமணி, ஒன்றிய மீனவரணி லீனஸ், பேரூராட்சி இளைஞரணி அமைப்பாளர் முகம்மது முபீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னாள் தமிழக சுற்றுலா மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சுரேஷ்ராஜன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பிரதிநிதி சுல்தான் கண், செல்லப்பன், பேரூராட்சி இளைஞரணி துணை அமைப்பாளர் வின்சென்ட் ராஜா, பேரூராட்சி இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் நாசர், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கிருஷ்ணகுமார், உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் எப்.எம்.இராஜரெத்தினம், கழக மீனவரணி செயலாளர் இரா.பெர்னார்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.புஷ்பலீலா ஆல்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்ராஜ், சிவராஜ், சந்திரா, நசீர், சசியோன், சேக்தாவூது, ஜெபராஜ், பிதேலிஸ், சுபாஷ், சேவியர், மெர்சி, வேல்குமார், ஆன்றோ சர்ச்சில், உதயகுமார், வேலப்பன், கோபாலதாஸ், அகஸ்டின், முத்தமிழ்செல்வி, சேகர், சுரேஷ், லதா ராபின்சன், பாலையன், ஜெயவின்ராஜ், பனிதாசன், கேபிள்ராஜ், ஜஸ்டின் வில்பிரட், நேவிஸ், செல்வகுமார், தேவதாஸ், மல்கியாராஜன், மணிகண்டன், ராஜேஷ், பழக்கடை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு, பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு உள்ளிட்ட பலவற்றிற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் போடப்பட்டன.
0 Comments: