.jpg)
குமரிமாவட்ட செய்திகள்
செங்கோடி பெருஞ்சக்கோணம் வைகுண்டர் தர்மப்பதி திருப்பதம் சார்த்தல் திருநாள்
செங்கோடி பெருஞ்சக்கோணம்
வைகுண்டர் தர்மப்பதி திருப்பதம் சார்த்தல் திருநாள்
30-01-2012
செங்கோடி பெருஞ்சக்கோணம் பிலாங்காலவிளை வைகுண்டர் தர்மப்பதி திருப்பதம் சார்த்தல் திருநாள் இம்மாதம் 27-ம் தேதி துவங்கி 29-ம் தேதி வரை (வைகுண்டர் வருடம் 180 தை 14 முதல் 16 வரை) நடைபெற்றது.
ஒன்றாம் நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு பணிவிடை, பால்வைத்தல், துவையல் தவசு நிகழ்வும், காலை 6 மணிக்கு திருப்பதம் சார்த்தல் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரும்பாட்டூர் அய்யாவழி மக்கள் இயக்க பொதுசெயலாளர் தினகரன் திருப்பதம் சாத்தினார். சீயோன்மலை அய்யா வைகுண்டர் திருப்பதி திருப்பணிவிடையாளர் வி.இராமகிருஷ்ணன் சாமியார் மற்றும் பெரிஞ்சக்கோணம் செல்வராஜ் சாமியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட சிவசேனா பொதுசெயலாளர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். அய்யாவழி மக்கள் இயக்க தலைவர் ஆர்.டி.சிவகுமார் சிறப்புரை வழங்கினார். மதியம் 12.30 மணிக்கு அன்ன தருமமும், மாலை 5 மணிக்கு பணிவிடை நிகழ்வும், 6 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடுவாசித்தாலும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வில் காலை 5 மணிக்கு பணிவிடை, பால்வைத்தல், துவையல் தவசு நிகழ்வும், காலை 11.30 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு நிகழ்வும், மதியம் 12.30 மணிக்கு அன்னதருமமும் நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு அன்ன தருமம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அய்யா அன்பு தொண்டர் தளவாய்புரம் பி.இளையபெருமாள் இசைக்குழுவினரின் “மாபெரும் அய்யாவழி இன்னிசை” நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு பணிவிடை, பால்வைத்தல், துவையல் தவசு நிகழ்வும், மதியம் 12.30 மணிக்கு அன்ன தரும நிகழ்வும், மாலை 3 மணிக்கு ஊர்மக்கள் பால்வைத்தல் நிகழ்வும், மாலை 5 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல் நிகழ்வும் நடந்தது. இரவு 9 மணிக்கு நினைவு பரிசளிப்பு விழா நடந்தது. விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா பி.செல்வராஜ் மற்றும் விழாக்குழு செய்திருந்தது.
0 Comments: