
குமரிமாவட்ட செய்திகள்
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை
25-02-2013
நாகர்கோவில், வடசேரி காதரின்பூத் ஆஸ்பத்திரி சாலையில் வசிப்பவர் முகேஷ். பெயிண்டர். இவருக்கும் பிரியமதி (வயது 21) என்பவருக்கும் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்பும் பிரியமதி கல்லூரி படிப்பை விடவில்லை. பழவிளை பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபட்டார். இதன் பலனாக அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
பிரியமதியின் கணவர் முகேஷ் குடிப்பழகத்திற்கு அடிமையானார். தினமும் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும்போது, குடிபோதையில் இருப்பார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று மாலையிலும் இதுபோல அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முகேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார். இன்று காலையில் அவர் வீட்டுக்கு வந்தார். அங்கு பிரியமதி தூக்கில் பிணமாக தொங்கினார். அதை கண்டு முகேஷ் அலறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரியமதிக்கு திருமணம் முடிந்து 21/2 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து சப்-கலெக்டர் சங்கர்லால் குமாவத் விசாரணை நடத்தினார். பிரியமதி சாவில் மர்மம் இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
0 Comments: