
Manavai News
Special News
மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் நடத்திய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது
மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் நடத்திய
விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது
25-02-2013
மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் நடத்தும் இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் 24-02-2013 அன்று இரவு 8.45 மணிக்கு மணவாளக்குறிச்சி சின்னவிளை சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் வைத்து நடந்தது.
![]() |
சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் எஸ்.சம்சுதீன் காஸிமி பேசிய போது எடுத்தப்படம். அருகில் நாகர்கோவில் கலாச்சாரக்கழக இமாம் எம்.ஏ.சௌக்கத் அலி உஸ்மானி |
இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு முஹம்மது முபீன் வரவேற்புரை வழங்கினார். நாகர்கோவில் கலாச்சாரக்கழகம் இமாம் எம்.ஏ. சௌக்கத்அலி உஸ்மானி அவர்கள் “தலைமை இமாம், நிர்வாகிகள், பெற்றவர்கள், பெண்கள், இளைஞர்கள் இவர்களின் பொறுப்பு” என்ற தலைப்பில் மார்க்க சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் எஸ். சம்சுதீன் காஸிமி அவர்கள் “இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் கிரிமிகள்” என்ற தலைப்பில் மார்க்க பேருரை வழங்கினார்.
![]() |
முஹம்மது முபீன் வரவேற்புரை வழங்கிய காட்சி |
![]() |
நாகர்கோவில் காலாச்சரக்கழக இமாம் சௌக்கத் அலி உஸ்மானி பேசிய காட்சி |
நிகழ்ச்சியில் நன்றியுரையை சலாவுதீன் வழங்கினார். மேலும் சபீக் ரகுமான், சாதிக், அப்துல் நாசர், காதர், அனீப், காசிம் உள்பட பல இஸ்லாமிய சகோதரர்கள் இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்திட உறுதுணையாக இருந்தனர்.
![]() |
முஸ்லிம் முஹல்ல செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்த காட்சி |
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை காண நாகர்கோவில், குளச்சல், திருவிதாங்கோடு உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெருமளவில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
![]() |
நன்றியுரை வழங்கிய சலாவுதீன் |
![]() |
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒருபகுதியினர் |
0 Comments: