
குமரிமாவட்ட செய்திகள்
குளச்சல் ஓரியண்ட் மெட்ரிக். பள்ளி சில்வர் ஜூப்லி விழா
குளச்சல் ஓரியண்ட் மெட்ரிக். பள்ளி சில்வர் ஜூப்லி விழா
23-02-2013
குளச்சல் காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஓரியண்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 25-வது ஆண்டு சில்வர் ஜூப்லி விழா இன்று (23-02-2013) மாலை 4 மணி அளவில் துவங்கியது.
![]() |
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் |
பள்ளி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் குளச்சல் நகரமன்ற தலைவர் ஏ.நசீர், குமரி மாவட்ட உதவி வணிகவரி கண்காணிப்பாளர் எம்.பாஸ்கர், குளச்சல் புனித மேரீஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பங்குதந்தை பெலிக்ஸ், மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல தலைவர் முஹம்மது பஷீர், வழக்கறிஞர் கே.பி.ராஜன், குவைத் பல்கலைக்கழகம் ஜூனியர் விஞ்ஞானி அல்ஹாஜ் ரஹ்மத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
![]() |
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் |
நிகழ்ச்சியின் துவக்கத்தில் பள்ளி மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். வரவேற்புரையை ஓரியண்ட் பள்ளி தாளாளர் பீர் முஹம்மது வழங்கினார். பள்ளி ஆண்டு அறிக்கையை பள்ளி முதல்வர் பி.விமலா சேகர் வழங்கினார். நிகழ்ச்சிகளை எஸ்.யூசுப் தொகுத்து வழங்கினார்.
தொடர்ந்து ஆண்டு இறுதி தேர்வில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழகப்பட்டன. மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள். பின்னர் மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஓரியண்ட் பள்ளி உறுப்பினர் ஏ.பி.நஜ்முதீன் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0 Comments: