
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு புதூரில் தீயில் கருகி மாணவி பலி
மண்டைக்காடு புதூரில் தீயில் கருகி மாணவி பலி
23-02-2013
மண்டைக்காடு புதூர் 11-வது அன்பியத்தைச் சேர்ந்தவர் ஜெரோம். மீன்பிடித் தொழிலாளி. இவரது மகள் ஜோஸ் ஆஷிகா (வயது 13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9-ந்தேதி இரவு வீட்டில் மண்எண்ணை விளக்கில் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது விளக்கு திடீரென சரிந்து விழுந்தது. இதில் மாணவியின் உடலில் மண்எண்ணை சிதறி தீப்பிடித்துக்கொண்டது. உடல் கருகி உயிருக்கு போராடிய சிறுமி ஜோஸ் ஆஷிகாவை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ஜோஸ் ஆஷிகா பரிதாபமாக இறந்து போனார்.
இதுபற்றி சிறுமியின் தாயார் மரிய ஆபரணம், மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வினோத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: