
குமரிமாவட்ட செய்திகள்
போலீஸ் நிலையத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் காதலனுடன் தஞ்சம்
போலீஸ் நிலையத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண்
காதலனுடன் தஞ்சம்
26-02-2013
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி குளுமைக் காடு பகுதியை சேர்ந்தவர் ஜெனிதா (வயது 21). இவர் வில்லுக்குறியில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஜெனிதா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தாய் செல்வம் இரணியல் போலீசில் புகார் செய்தார்.
அதில், ஆழ்வார்கோவிலை சேர்ந்த சதீஷ் (30) என்பவர் தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் விசாரணை நடத்திய போது சதீஷும், ஜெனிதாவும் காதலித்து வந்ததும், சம்பவத்தன்று ஓட்டம் பிடித்ததும் தெரிய வந்தது. போலீசார் சதீஷையும், ஜெனிதாவையும் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் இரணியல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ராஜேந்திரனிடம் தஞ்சம் அடைந்தனர். அவர் இருவரையும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து வைத்தார்.
பின்னர், காதல் ஜோடி இரணியல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறினர். சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ இருவீட்டாருக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் இருவீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது. ஜெனிதா காதல் கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
0 Comments: