Surrounded Area
விசைப்படகு மீது கப்பல் மோதி பலியான குளச்சல் மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
குளச்சலை சேர்ந்த மீனவர் ஆண்டனி ஜான் (வயது 57). இவரும், 13 மீனவர்களும் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடந்த 10–ம் தேதி இரவு கொச்சி துறைமுகம் அருகே கடலில் நங்கூரம் பாய்ச்சி விசைப்படகை நிறுத்தி இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற பனாமா நாட்டு சரக்கு கப்பல் ஒன்று அவர்கள் விசைப்படகு மீது மோதியது. இதில் ஆண்டனி ஜான் உள்பட 3 மீனவர்கள் பலியானார்கள். இதைத்தொடர்ந்து, ஆண்டனி ஜானின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்பு நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸ் மூலம் உடல் குளச்சல் துறைமுகதெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மீனவர் ஆண்டனி ஜானின் உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் உறவினர்களும், பொதுமக்களும் ஆண்டனி ஜான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நேற்று காலை அவரது உடல் குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் அருகே உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் உறவினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
0 Comments: