
Surrounded Area
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.8¼ லட்சம் உண்டியல் வசூல்
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி தலைமையில் நேற்று எண்ணப்பட்டன. இதில் உதவி ஆணையர் வெங்கடேஷன், மண்டைக்காடு கோவில் மேலாளர் ஆறுமுகதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஈடுபட்டனர். உண்டியல்கள் மூலம் ரூ.8 லட்சத்து 43 ஆயிரத்து 766 வசூலாகி இருந்தது. மேலும் 15.300 கிராம் தங்கமும், 127 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்துள்ளன.
0 Comments: