
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
06-02-2016
மணவாளக்குறிச்சி அருகே உள்ள திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசபட் (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாதவி (32). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதி ஸ்ரீனிவாசபட் காலை கோவில் பூஜைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் மாதவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஸ்ரீனிவாசபட் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாதவி தற்கொலைக்கான காரணம் குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில், ஸ்ரீனிவாசபட், திருமணத்துக்கு முன்பே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்ததாகவும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனைவியை அவர் அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் மாதவி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.
0 Comments: