
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே பூசாரி மனைவி தற்கொலை
மணவாளக்குறிச்சி அருகே பூசாரி மனைவி தற்கொலை
03-02-2016
மணவாளக்குறிச்சி அருகே திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 40). இவரது மனைவி மாதவி (32). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. ஸ்ரீனிவாசன் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் ஸ்ரீனிவாசன் கோவிலுக்கு சென்றார். காலை 9.30 மணியளவில் திரும்ப வந்த போது, மாதவி வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: