
Manavai News
மணவாளக்குறிச்சியில் முன்விரோதத்தால் தொழிலாளி மீது தாக்குதல்
மணவாளக்குறிச்சியில் முன்விரோதத்தால் தொழிலாளி மீது தாக்குதல்
03-02-2016
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 24), கூலி தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வினு, சுயம்புராஜன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று ஆனந்த், பெரியஏலா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த வினு, சுயம்புராஜன் ஆகியோர் ஆனந்தை தடுத்து நிறுத்தி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆனந்த் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணவளாக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: