
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு அருகே கால்வாயில் மிதந்த பெண் குழந்தை பிணம்
மண்டைக்காடு அருகே கால்வாயில் மிதந்த பெண் குழந்தை பிணம்
01-02-2016
மண்டைக்காடு அருகே பிறந்த சில மணி நேரத்தில் பெண் குழந்தை கால்வாயில் பிணமாக மிதந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்த விவரம் வருமாறு:- மண்டைக்காடு அருகே காளிவிளை பகுதி வழியாக கரும்மன்கூடல் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது மிதமான அளவு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீரில் புல்புதர்கள் நடுவே ஒரு பெண் குழந்தையின் உடல் பிணமாக கிடப்பதை கண்டனர். இதுகுறித்து மண்டைக்காடு கிராம நிர்வாக அதிகாரி தாரணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மண்டைக்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கால்வாயில் வீசி சென்றதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, போலீசார், பெண் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெண் குழந்தை என்பதால் கால்வாயில் வீசினார்களா? அல்லது, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கால்வாயில் வீசிவிட்டு சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: