
District News
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் குமரி மகாசபாவினர் கோரிக்கை
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் குமரி மகாசபாவினர் கோரிக்கை
11-01-2016
உலக புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டி மத்திய அமைச்சரிடம் குமரி மகா சபாவினர் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த இருதினங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வந்த மத்திய சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோரை குமரி மகா சபா தலைவரும், கர்நாடகா உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எம்.ராவின்சன் தலைமையில், பி.ஹெச்.டி தொண்டு நிறுவன இயக்குநர் சூசைமரியான், மகாசபா துணைத்தலைவர் ஏ.சசிகுமார், வழக்கறிஞர் தம்பிராஜ், இணை செயலாளர்கள் ஸ்ரீராம், ஸ்டாலின் உப்பட பலர் நேரில் சந்தித்து குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது குறித்து கோரிக்கை மனு சமர்ப்பித்தனர்.
அமைச்சர் விமான நிலையம் அமைய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
0 Comments: