
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் அருகே தோட்டத்துக்குள் பதுக்கிய 350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
குளச்சல் அருகே தோட்டத்துக்குள் பதுக்கிய 350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
03-02-2016
குளச்சல் பகுதியில் இருந்து அடிக்கடி கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன்பேரில் போலீசார் அந்த பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று வெள்ளியாவிளை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குளச்சல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை, சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், ரவீந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துச் சென்றனர். அப்போது ஒரு தோப்புக்குள் தார்பாயால் மூடப்பட்டு இருந்த அரிசி மூடைகளை கண்டனர்.
அவற்றை சோதித்த போது அவை அனைத்தும் ரேசன் அரிசி என்பதும், 350 கிலோ அரிசி மூடைகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், வருவாய் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் தோப்புக்குள் ரேசன் அரிசி பதுக்கிய நபர்கள் யார்? எங்கு கொண்டுச் செல்ல அவை பதுக்கி வைக்கப்பட்டது? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: