
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே பேக்கரி குடோனில் திருட்டு
மணவாளக்குறிச்சி அருகே பேக்கரி குடோனில் திருட்டு
03-02-2016
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் அந்த பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள அவருடைய குடோனுக்கு சென்றார். அப்போது அங்கு வைத்திருந்த கேக் மெஷின், டெக்கரேசன் மெஷின், ரேடியோ உள்பட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
மேலும், அங்குள்ள பொருட்களையும் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து, பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.
0 Comments: