
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிமலை பேரூராட்சி பாஜக கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
வெள்ளிமலை பேரூராட்சி பாஜக கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
01-01-2016
வெள்ளிமலை பேரூராட்சி பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில பாஜக பொது செயலாளர் ராஜகோபால் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய பார்வையாளர் கார்த்திகேயன், ஒன்றிய தலைவர் முத்து கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் சிவகுமார், ஒன்றிய பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொது செயலாளர் குமரி ப.ரமேஷ், செயலாளர் தங்கப்பன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவரும், வெள்ளிமலை பேரூராட்சி மன்ற தலைவருமான வசந்தா, மாநில மூத்தோர் பிரிவு துணை தலைவர் பொன்.ரெத்தினமணி, மாநில இலக்கிய அணி துணை தலைவர் பொன்னுலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
பி.எஸ்.கே.
மணவாளக்குறிச்சி.
0 Comments: