
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் துறைமுகத்துக்கு நிதி ஒதுக்கீடு: பா.ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குளச்சல் துறைமுகத்துக்கு நிதி ஒதுக்கீடு: பா.ஜனதா கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
05-09-2015
குளச்சல் துறைமுகத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கும், இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மபுரம் கணேசன் தலைமை தாங்கி இனிப்புகளை வழங்கினார். இதில் மாநில செயலாளர் தர்மராஜ், கோட்ட அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் ரத்தினமணி, மாவட்ட துணைத்தலைவர் தேவ், மகளிரணி செயலாளர் உமாரதிராஜன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments: