
சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல் கடலில் ஏராளமாக மீன்கள் சிக்கின: கேரள வியாபாரிகள் வாங்கி சென்றனர்
குளச்சல் கடலில் ஏராளமாக மீன்கள் சிக்கின: கேரள வியாபாரிகள் வாங்கி சென்றனர்
31-08-2015
குளச்சல் துறைமுக பகுதியை தங்குதளமாக கொண்டு சுமார் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 500–க்கு மேற்பட்ட கட்டுமர வள்ளங்களிலும் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் கரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் முறையில் விற்பனை செய்யப்படும். அவற்றை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வெளியூர்களுக்கு எடுத்து செல்வார்கள்.
அதன்படி, கடலுக்கு சென்று திரும்பிய விசைப்படகு மீனவர்கள் வலையில் ஏராளமான கணவாய், நாக்கண்டம் மீன்கள் சிக்கின. இதைத்தொடர்ந்து, மீன்களை கூடைகளில் நிரப்பி கடற்கரை பகுதியில் ஏலம் விடப்பட்டது. 50 கிலோ எடை கொண்ட ஒரு கூடை கணவாய் ரூ.6 ஆயிரத்திற்கும், நாக்கண்டம் ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. கணவாய் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உயர்ரக மீனாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றை கேரள வியாபாரிகள் உள்பட ஏராளமானோர் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். இதற்காக அந்த பகுதியில் ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர்.
0 Comments: