
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிச்சந்தையில் பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்போன் பறிப்பால் வாலிபர் தற்கொலை
வெள்ளிச்சந்தையில் பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்போன் பறிப்பால் வாலிபர் தற்கொலை
29-08-2015
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியைச் சேர்ந்தவர் அஜிஸ் (வயது 28). கார் டிரைவர். இவர் கடந்த 5–ம் தேதி குடித்து விட்டு ரகளை செய்வதாக வெள்ளிச்சந்தை போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் அஜிசை பிடித்து விசாரித்தனர். பின்னர் அஜிஸ் வைத்திருந்த ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை போலீசார் வாங்கி வைத்து கொண்டு அவரை திருப்பி அனுப்பினர். அதைத்தொடர்ந்து அஜிஸ் செல்போனை வாங்குவதற்காக தினமும் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். ஆனால் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தியை அவரால் சந்திக்க முடியாததால் செல்போனை வாங்க முடியவில்லை.
![]() |
தற்கொலை செய்து கொண்ட அஜீஸ் |
இதனால் ஆத்திரம் அடைந்த அஜிசின் உறவினர்களும், பொதுமக்களும் நேற்று வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் போலீஸ் நிலையம் முன்புள்ள ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அஜிசின் சாவுக்கு சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தான் காரணம், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பொதுமக்களுடன் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ், தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் மற்றும் அரசியல் கட்சியினரும் இணைந்து கொண்டனர். இதனால் போராட்டம் வலுப்பெற்றது.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அஜிஸ் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் அஜிஸ் மரணம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக சரியான தகவல்களை கொடுக்காத தனிப்பிரிவு ஏட்டு முருகன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே அஜிசின் மனைவி சிசிலி வெள்ளிச்சந்தை போலீசில் அளித்துள்ள புகாரில் எனது கணவர் சாவுக்கு பெண் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தான் காரணம் என கூறி உள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். அஜிசுக்கு 3 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
0 Comments: