District News
நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது
நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது
23-07-2015
நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை பேரணி நேற்று மாலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் லீடன்ஸ்டோன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இராஜகுமார், மாநில செயலாளர் விஜயபாஸ்கர் சிறப்புரை வழங்கினர். பேரணியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான தமிழக அரசு ஊழியர்களுக்கும் சதவீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி மற்றும் கல்விப்படி உள்ளிட்ட அனைத்துப்படிகளும் வழங்கிட வேண்டியும்,
மறுக்கப்பட்டுள்ள ஓராண்டு நிலுவைத் தொகையினை உடன் ரொக்கமாக வழங்கிட வேண்டியும், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி உடன் மாற்றுப்பணி வழங்கிட வேண்டியும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பேரணியில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
பிஎஸ்கே
மணவாளக்குறிச்சி
0 Comments: