Manavai News
மணவாளக்குறிச்சி, நாகர்கோவில் பகுதிகளில் நவராத்திரி விழா
மணவாளக்குறிச்சி, நாகர்கோவில் பகுதிகளில் நவராத்திரி விழா
10-01-2014
மணவாளக்குறிச்சி தருவையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட வார வழிபாட்டு மன்றம் உள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்கள் கொலுவைத்து தினசரி பூஜை நடந்து வருகிறது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். விழாவில் மன்ற தலைவர் ராஜேந்திரன், வசந்தா, உமா, மகேஸ்வரி நாகராஜன், ஜோதிலெட்சுமி, ஜெகதீஸ்வரி முருகேசன் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் நாகர்கோவில் சிதம்பரநகர் ஆசாரிமார் வடக்குத்தெரு முத்துசாமி ஆசாரி, அன்பு ஆசாரி, இசக்கி ஆகியோர் உட்பட பல வீடுகளில் நவராத்திரியை முன்னிட்டு கொலுவைத்து வழிபட்டு வருகின்றனர்.
Photos
“Puthiyapuyal” Murugan
Manavalakurichi






0 Comments: