சுற்றுவட்டார செய்திகள்
குளச்சலில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம்
குளச்சலில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம்
11-07-2015
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் நேற்று நடக்க இருப்பதாக மாவட்ட தலைவர் தர்மபுரம் கணேசன் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தார்.
தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற கோரி தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு 13 இடங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. குளச்சலில், குளச்சல் நகரத்தலைவர் பெருமாள் தலைமையில் குளச்சல் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குளச்சல் நகர பா.ஜனதா நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு முதுக்கடைகளை மூடக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதேபோல் தக்கலை ஒன்றியத்தலைவர் ரவிகுமார் தலைமையில் அழகியமண்டபம் பஸ் நிலையத்திலும், பத்மநாபபுரம் நகரத்தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமையில் தக்கலை பஸ் நிலையத்திலும், திருவட்டார் ஒன்றிய தலைவர் வினோத் தலைமையில் குலசேகரம் சந்தையிலும், மேல்புறம் ஒன்றிய தலைவர் சுரேஷ்சந்திரன் தலைமையில் அருமனை சந்திப்பிலும், குழித்துறை நகர தலைவர் ரத்தினமணி தலைமையில் மார்த்தாண்டம் காந்தி மைதானத்திலும், முஞ்சிறை ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில் புதுக்கடை பஸ் நிலையத்திலும், கிள்ளியூர் ஒன்றியத்தலைவர் கோட்டகம் விஜயகுமார் தலைமையில் கருங்கல் ஆட்டோ நிலையத்திலும் என மொத்தம் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி மற்றும் அணி பிரிவுகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பஞ்சாயத்து, கிளைப்பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் உள்பட பா.ஜனதா கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Photos
PSK, Manavalakurichi
0 Comments: