Manavai News
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் ஈகை திருநாள் மற்றும் பேரவையின் 30-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள்
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் ஈகை திருநாள் மற்றும் பேரவையின் 30-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள்
10-07-2015
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் ஈகைப் பெருநாள் மற்றும் இளைஞர் பேரவையின் 30-வது ஆண்டு விழா ரமலான் பெருநாள் தினத்திலிருந்து 3 நாட்கள் நடத்தப்படுகிறது. முதல் நாள் (ரமலான் பெருநாள் அன்று) விழாவில் காலை 10 மணிக்கு சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், மாலை 4 மணிக்கு திருமணம் ஆனவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்குமான வடம் இழுத்தல் போட்டியும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு ஜூனியர் மற்றும் சீனியருக்கான கபடி போட்டிகள் நடைபெறுகிறது.
2-ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு சீனியர் மற்றும் ஜூனியருக்கான லாங்க் ஜம்ப் மற்றும் ஓட்டப்பந்தய போட்டியும், மாலை 2 மணிக்கு கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மாபெரும் பட்டிமன்ற நிகழ்ச்சி, “குடும்ப மகிழச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா?” என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு வடகரை நகர உலமாசபை செயலாளர் அப்துற் ரஹ்மான் நூரி நடுவராக கலந்து கொள்கிறார். தொடர்ந்து மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவையினர் |
3-ம் நாள் நிகழ்ச்சியில் மாலை 4 மணிக்கு வாலிபால் போட்டி நடக்கிறது. இரவு 8 மணிக்கு மாபெரும் மார்க்க பேருரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சென்னை பாலவாக்கம் பள்ளிவாசல் இமாம் மௌலவி அபுபக்கர் உஸ்மானி கலந்து கொண்டு “இணையமும் இஸ்லாமும்” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை நிர்வாகக்குழு உறுப்பினர்களான மஜீதுல் அர்சாத் (தலைவர்), முஹம்மது றீஹான் (து.த), முஹம்மது பாசித் (செயலாளர்), நபில் முர்சாத் (து.செ), ரியாஸ் (பொருளாளர்) மற்றும் செயற்குழு உறுப்பினர்களான அல்தாஃப், காமில், சாகுல் ஹமீது, ஆதில் அலி, முஹம்மது அப்துல்லா ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.
0 Comments: