
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா
வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா
03-06-2015
வெள்ளிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா சென்ற மாதம் 31 மற்றும் இம்மாதம் 1-ம் தேதி ஆகிய நாள்களில் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு உஷ பூஜை, காலை 6.30 மணிக்கு ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மற்றும் ஸ்ரீமத் சுவாமி கருணானந்தஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொண்ட அகண்ட நாம ஜெப மகாயக்ஞம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
2-ம் நாள் நிகழ்ச்சியில் காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, பகல் 11.30 மணிக்கு அபிஷேகமும், பஜனையும், பகல் 1.30 மணிக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி மயில் வாகனத்தில் உலா வருதலும், இரவு 9.30 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளை வெள்ளிமலை ஆலய முன்னேற்ற சங்கம் மற்றும் திருக்கோவில் நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.
செய்தி மற்றும் போட்டோஸ்
“புதிய புயல்” முருகன்
மணவாளக்குறிச்சி

0 Comments: