
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு அருகே அரசு பஸ் பள்ளத்தில் பாய்ந்தது: 60 பயணிகள் தப்பினர்
மண்டைக்காடு அருகே அரசு பஸ் பள்ளத்தில் பாய்ந்தது: 60 பயணிகள் தப்பினர்
04-06-2015
நாகர்கோவிலில் இருந்து குளச்சலுக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர். மண்டைக்காடு அருகே கூட்டு மங்கலம் பகுதியில் பஸ் வரும்போது பஸ்சின் ஸ்டிரிங் கட் ஆகி பஸ்தாறுமாறாக ஓடியது.
பஸ்சில் இருந்த பயணிகள் அபய குரல் எழுப்பினர். டிரைவர் ஈத்தாமொழியை சேர்ந்த குமார் பஸ்சை நிறுத்த முயன்றார். அதற்குள் பஸ் ரோட்டு ஓரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 60 பயணிகளும் காயமின்றி தப்பினர். இதில் கண்டக்டர் காயம் அடைந்தார். அவர் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

0 Comments: