District News
நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் இருசக்கர வாகன பேரணி
நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் இருசக்கர வாகன பேரணி
22-06-2015
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் ஜூலை 1–ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து நாகர்கோவிலில் போலீசார் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடத்தினர். பேரணியில் கலந்து கொண்ட போலீசார் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். பேரணியை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகம் முன் இருந்து தொடங்கிய இந்த பேரணி பார்வதிபுரம், வடசேரி, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், செட்டிகுளம் சந்திப்பு வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன் வந்து முடிவடைந்தது. பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, கஜேந்திரன், ராஜேஷ், அருள்ஜாண் ஒய்ஸ்லின்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், அருள்சேகர், தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments: