இயற்கை மருத்துவம்: வேம்பு
22-06-2015
வேம்பு இயற்கை மனிதனுக்கு அளித்த அருட்கொடை. அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன. நிலவேம்பு, மலை வேம்பு, காட்டு வேம்பு என அனைத்து வகை வேம்புகளுமே மருத்துவ தன்மை கொண்டது. வேப்பிலை, வயிற்று புழுக்கள், சுவாச நோய்களை குணப்படுத்தவல்லது.
வேம்பில் நார்ச்சத்து, மாவுச்சத்து, புரதசத்து மற்றும் 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடிய ஆற்றல் வேம்பிற்கு உண்டு. சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களுக்கு கிருமிநாசினியாக வேப்பிலையை பயன்படுத்தலாம். வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண் போன்ற காயங்கள், வீக்கம், பித்தவெடிப்பு, கட்டிகள், அம்மை கொப்புளங்கள் ஆகியவற்றின் மீது பூசி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை நேரத்தில் பத்து வேப்பிலை கொழுந்துடன், ஐந்து மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். பெரும்பாலான அழகு சாதனபோருட்கள், விவசாய பூச்சி கொல்லி மருந்து, லோஷன்கள், சோப்பு, கூந்தல் தைலம் போன்றவைகள் வேம்பில் இருந்து உருவாக்கப்படுகிறது.
தகவல்
“புதியபுயல்” முருகன்
மணவாளக்குறிச்சி
0 Comments: